நெஞ்சினிலே

Uncategorized

உன் ஒளியில் காதல் அறிந்தேன்

உன் அழகில் கவிதை அறிந்தேன்

யாரும் அறியா

உன் நடனத்தை நெஞ்சினிலே நான் அறிந்தேன்

அக்காட்சியே  இக்கலையானது

தாலாட்டு

Uncategorized

வானத்தின் தாலாட்டில் காற்று கண்ணுறங்க

ஆகாயம் தூங்கிவிழ

முடிவிலி வான் மடி உறிஞ்சிருக்க

மௌனமாய் வானிருக்க

தாலாட்டு நிறைவுற்றது

இல்லாமல் இருக்கிறான் ஈசன்

தீரனே

Uncategorized

தோல்வியை வென்றிட்ட வீரனே

தேவைகளை எவ்வாறு தோற்க்கடித்தாய்

கற்றுக் கொடு

அவர்கள்  பைத்தியமாக

அவர்கள் சோகமாக

அவர்கள் இரண்டும் இரெண்டென கூட்ட

அவர்கள் நானாக

அவர்கள் நீயாக

அவர்கள் நம் தேவையாக

அவர்கள் சிரிக்க

அவர்கள் கதறி அழ

அவர்கள் செத்து மடிய

கற்றுக் கொடு

 

One of the Few (Waters)

When you’re one of the few to land on your feet
What do you do to make ends meet?
Teach.
Make them mad, make them sad, make them add two and two.
Make them me, make them you, make them do what you want them to.
Make them laugh, make them cry, make them lie down and die.

The Final Cut – is the twelfth studio album by the English progressive rock band Pink Floyd, released on 21 March 1983.

தீ கவிதை

Rumi

உன் காதலால் என் இதயத்தில் பரவிய தீ

உன் காதல் ஒழிய மற்றனைத்தும் ஒழித்தது தீ

கற்ற காரணங்களும் புத்தகங்களும் கிடப்பில் இட்ட தீ

என்னுள் பரவிய கவிதை தீ

 

Soul Search

சிவனெ பேசு, Uncategorized

உயிர் உயிரிடம் பெறுகிறது

அறிவை உயிர் உயிரிடம் பெறுகிறது

புத்தகத்தில் அல்ல

சொல்வழக்கில் அல்ல

இந்த புதிரான அறிவு

மனமடங்கி தோன்றும் தெளிவு

இது இதயத்தின் ஒளிர்வு

சுயரூபம்

சிவனெ பேசு, தேவார தாசிமய்யா, Uncategorized

கணத்த மார்பும் நீண்ட கூந்தலும் பெண் ரூபம்

மீசையும் தாடியும் ஆண் ரூபம்

ஆனால், இடையே வட்டமிடும் சுய ரூபம்

ஆணோ இல்லை பெண்ணோ

ஓ ராமநாதா