அனுமன் நாற்பது

குரு பாத தூசி கொண்டு மனக்கண்ணாடி தூய்மை கொண்டேன் நாட்செல்வம் அளிக்கும் ரகுவம்ச ராமனின் மாசற்ற மகிமையை இங்கு விவரிக்கிறேன் அறிவற்ற நான் அறிந்தேன் வாயு புத்திரனை தியானிக்க அவனே வலிமை அறிவு புத்தி அளித்து அணைத்து இன்னல்களை விடுவிப்பான் வெற்றி அனுமனுக்கே அவனே ஞான ஒழுக்கத்தின் பெருங்கடல் வெற்றி அத்தெய்விக மந்திக்கே அவனே மூவுலகையும் ஒளிர்வித்தவன் ராமா தூதனே மகா வலிமை கொண்டவனே அஞ்சனை மைந்தனே வாயு குமாரனே மகா தீர்னே மின்னல் உடல் வீரனே…

மனிதம்

இரக்கம் அற்ற மதம் உண்டா? கருணை அற்ற இனம் உண்டா? பரிவு அற்ற மனம் உண்டா? மனிதம் அற்ற மற்றவரை கால கணிதம் வேரறுக்கும்

Media – The Elephant in the room

Media is not in harmony with the medium Media is not ashamed of absurdity They speak nonsense beyond limit They Obstinately persists in supporting their views We admit the medium which lacks the media The parable for today’s social media. Once there was a village high in the mountains in which everyone was born blind….

எதுவும் வேண்டாம்h

அவன் அல்லது அவனடியாரும் வேண்டாம் வேற்று அல்லது ஒற்றுமையும் வேண்டாம் வேண்டும்  வேண்டாம் வேண்டாம் வேண்டாம் நீயும் வேண்டாம் நானும் வேண்டாம் சென்ன மல்லிகார்ஜுனா உன் சிந்தனையில் நானிருக்க எதுவம் வேண்டாம்

அவன் விதைத்தவன்

சூரியன் இட்ட விதையே உலகின் துடிப்பு மனம் இட்ட விதையே உடலின் துடிப்பு இருப்பதோ ஒரு மனம் அதில் துடிப்பதோ நீ இப்பிறப்பினால் பயமேதும் எனக்கில்லை  சென்ன மல்லிகார்ஜுனா

பிரம்மம்

வேதங்கள் வாதங்களாயின சாஸ்திரங்கள் சந்தேகமாயின அனைத்து ஆகமங்களும் தீர்ந்துபோயின தெரிந்த புராணங்களும் விட்டு போயின நான் எங்கே அவன் எங்கே ப்ரம்மம் எங்கே சென்ன மல்லிகார்ஜுனா  

அனைத்துமாகி

பசிக்கு பிட்சை பாத்திரம் இருக்க தாகம் தணிக்க குளங்கள் இருக்க குளிர்க்கு பிறர் துறந்த ஆடைகள் இருக்க உறங்க பாழடைந்த கோவில் இருக்க அனைத்துமாகி இருக்கிறார் சென்ன மல்லிகார்ஜுனா 

தேவையின் தேவையாய்

தேவை தேவையுற நட்பாய்  பாசமாய் காதலாய் கருணையாய் சேயாய் உடன்பிறப்பாய் தாயாய் தந்தையாய் ஏன் கடவுளும் ஆவாய் தேவையற நீ யாரோ

கமல்கூற்று

சமூகவலைதளம் சமூகwarகளமாக மாற மூட வாதிகள் அரசு வியாதிகள் அவைகூற ரசிக பெருமான் அம்மான் அறைகூற சமூகம் சுமுகமாக அறன் கூறுமா?  

yet to name

இறுக பிடிக்காதே உறுதியாய் இழப்பாய் திரையை மூடாதே முடிவாய் இருப்பாய் இங்கு தருணத்தே எல்லோருமாய் சொர்கமாய் விட்டு செல்லாதே இவ்வாராய் அழிப்பாய்